Loading...
அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த ஒருவர், விசித்திரமான, முன்மாதிரி இல்லாத உலக சாதனை முயற்ச்சி ஒன்றை செய்து தோல்வியை தழுவிக்கொண்டார்.
ஜின் புரோல் என்ற குறித்த 66 வயதான அந்த முதியவர், ஒரே நேரத்தில் 160 சிகரெட்டுகளை புகைத்து, உலக சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இவர் ஒரு சாதனை விரும்பி. மற்றையவர்களை விட அளவில் பெரிய வாயை கொண்ட இவர், நூற்றுக்கணக்கான ஸ்ட்ரா மற்றும் சிகரெட்டுகளை பயன்படுத்தி முன்னதாக பல உலக சாதனையை படைத்துள்ளார்.
கடந்த 2003-ம் ஆண்டு 159 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் புகைத்து உலக சாதனை படைத்த இவர், தற்போது தானே தனது சாதனையை முறியடிக்க விரும்பினார்.
ஆனால் வயதான காரணத்தினால் அவரது வாய்க்குள் 130 சிகரெட்டுகளை மட்டுமே வைக்க முடிந்துள்ளது.
இதனால் அவரால் அந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை. ஆனாலும் விரைவில் தனது சாதனையை தானே முறியடிப்பேன் என்று ஜின்புரோல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Loading...