நாட்டில் கொலை களவு போலவே கற்பழிப்புச் சம்பவங்களும் ஆங்காங்கே இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.என்னதான் கற்பழிப்புக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இச்சம்பவம் தொடர்கதையாக தொடரத்தான் செய்கின்றது.
அண்மையில் பேரதிர்ச்சிமிகு சம்பவமொன்று மெக்சிகோவில் ஈகாடெகப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இப்பகுதியை சேர்த்த பெண்கள் திடீர் திடீர் என காணாமல் போன பட்சத்தில் பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.புகாரின்பேரில் பொலிஸார் ஜீவான் கார்லோஸ் என்பவன் மீது சந்தேகித்து கடுமையான விசாரணை நடத்திய போது ,ஜீவான் சொன்ன வாக்குமூலம் அனைவரையும் உலுக்கியுள்ளது.
சுமார் 20 பெண்களை கற்பழித்து பின் அவர்களை கொலை செய்து,அவர்களின் உடலுறுப்புகளை வெட்டி பாகங்களை விற்பனை செய்வது மாத்திரமின்றி ஏனைய பகுதியை நாய்க்கு இரையாக்கியுள்ளார்.
சோதனையின் போது ஜீவானின் வீட்டுப்பகுதியில் அப்பெண்களின் எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டன.இதில் கொடுமையான விடயம் என்னவென்றால் இந்த கொடூர சம்பவத்திற்கு ஜீவானின் மனைவியும் துணை நின்றுள்ளார். இதனால் பொலிஸார் ஜீவானின் மனைவியையும் கைது செய்துள்ளனர்