தேனிலவுக்காக இலங்கைக்கு வந்த பிரிட்டிஷ் தம்பதியர் தங்கியிருந்த ஹொட்டலைப் பற்றி சர்வதேச ஊடகமொன்று அற்புதமான கதையை வெளியிட்டுள்ளது.
2017 டிசம்பர் மாதத்தில் 33 வயதான Gina Lyons மற்றும் 35 வயதான Mark Lee என்ற தம்பதியினர் தேன் நிலவுக்காக இலங்கைக்கு வருகை தந்து, தங்காலையில் அமைந்துள்ள ஒரு கடலோர ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
ஹோட்டலில் தங்கியிருக்கும் போது, ஒரு நாள் இருவரும் நன்றாக குடித்துக்கொண்டிருந்த வேளை அந்த ஹொட்டலின் பணியாளர் வந்து, ஹோட்டலை குத்தகைக்கு எடுத்த காலம் முடிடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இனையடுத்து அதிக மதுபோதையில் இருந்த குறித்த தம்பதியினர் ஹோட்டலை குத்தகை அடிப்படையில் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, பிரிட்டிஷ் பவுண் 30,000 இற்கு மூன்று வருடங்களுக்கு அவர்கள் ஹோட்டலை குத்தகைக்கு வாங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஜூலை முதலாம் திகதி 15,000 பவுண்கள் செலுத்தி அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிந்த பிறகு’Lucky Beach Tangalle என பேர் வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மிகுதி 15,000 பவுண்டுகள் எதிர்வரும் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு 7000 பவுண்களும் ஹோட்டல் மறுசீரமைப்பதற்காக அவர்கள் 6,000 பவுண்டுகள் செலவிட்டுள்ளதாக குறித்த தம்பதியினர் வெளிநாட்டு ஊடமொன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
“ நாங்கள் நன்றாக குடித்திருந்த வேளை ஹொட்டல் குத்தகை காலம் முடிந்துவிட்டதுதாக அவர் எங்களிடம் கூறினார். பின்னர் பார்க்கும்போது வருடத்திற்கு ஹோட்டல் குத்தகை பணம் 10 ஆயிரம் பவுண்ட்.
மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துக் கொள்ள நாங்கள் ஒரு நிமிடத்தில் முடிவு செய்தோம். நாங்கள் குடித்துவிட்டு கவர்ச்சிகரமான முடிவை எடுத்தோம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.