திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறாம் வாய்க்கால் பகுதியில் வயோதிபர் ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த வயோதிபர் மொரவெவ, ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த எஸ்.எம். ரத்னபாலா (58 ) எனவரே இவ்வாறு பாம்பு தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில் வயோதிபர் மாடுகளை கட்டுவதற்காக சென்ற போது பாம்பு கடித்ததாகவும், அதனை அடுத்து மகாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு , மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கபடுகின்றது.
இந்நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரிகள் சோதனை செய்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்