Loading...
எலுமிச்சை பழத்தின் தோலில் வைட்டமின் ஏ மற்றும் சி, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், போன்றவை அதிகம் நிறைந்துள்ளன.
எலுமிச்சை பழத்தைப் போல எலுமிச்சை பழத்தின் தோலிலும் ஏராளமான நன்மைகள் உண்டு. அதனால் எலுமிச்சை பழத்தைப் பயன்படுத்திவிட்டு,
Loading...
அதனுடைய தோலைத் தூக்கி எறியாமல் வீட்டில் பல விஷயங்களுக்குப் பயன்படுத்த முடியும்.
- எலுமிச்சை தோலின் உள்புறமாக உள்ள வெள்ளை நிறத்தோலை நீக்கி, அதில் தேவையான அளவு வெந்நீர் ஊற்றி 10 நிமிடங்களுக்கு பின் வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால், ஜீரண மண்டலம் வலிமையாகி, உடல் எடை குறையும்.
- எலுமிச்சை பழத்தின் தோலில் செய்த டீயை தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள பிஎச் அளவு சீராகி, உடலில் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
- நகங்களை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, எலுமிச்சை தோலை நகங்களின் மேல் தேய்த்து பின் கழுவினால், நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து நகங்கள் மென்மையாகவும் பளிச்செனவும் இருக்கும்.
- எலுமிச்சை பழத்தோலை பற்களில் தேய்த்து வாய் கொப்பளித்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறை மறைய ஆரம்பிக்கும்.
- எலுமிச்சையின் தோலைத் துருவி, அதனுடன் ஒயிட் வினிகரை சேர்த்து 2 வாரம் கழித்து, அதை வீட்டை சுத்தம் செய்யும் சோப் ஆயிலாகப் பயன்படுத்தலாம்.
- எறும்புகள், கரப்பான்பூச்சி தொல்லை போன்ற பிரச்சனைகள் இருந்தால், அந்த இடத்தில் எலுமிச்சை தோலை நறுக்கி வைத்தால் போதும். எறும்பு வீட்டை அண்டவே அண்டாது.
- எலுமிச்சை தோலை வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தவுடன் பொடி செய்து அதனுடன் தேன், சர்க்கரை, ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் ஸ்கரப் செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவு பெறும்
Loading...