கடந்த வருடம் தேனிலவை கொண்டாடுவதற்காக இலங்கை சென்ற பிரித்தானிய தம்பதியினர் வித்தியாசமான செயல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது, குறித்த தம்பதி இலங்கையில் தங்கியிருந்த ஹோட்டலை விலைக்கு வாங்க தீர்மானித்த சம்பவம் ஒன்று குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
33 வயதான Gina Lyons என்ற பெண் மற்றும் 35 வயதான Mark Lee என்பவரும் கடந்த வருடம் ஜுன் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் தங்கள் திருமணத்திற்காக இலங்கை வந்து தங்காலை கடல் பிரதேசத்தில் தங்கியிருந்துள்ளனர்.
அங்கு தங்கியிருந்த, இந்த தம்பியினர் ஹோட்டல் ஊழியர் ஒருவருடன் உரையாடலில் ஈடுப்பட்டிருந்துள்ளனர்.
அப்போது, இந்த ஹோட்டலின் வாடகை காலம் நிறைவடையவதாக ஊழியர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சமயத்தில், 12 கோப்பை ரம் என்ற மதுபானம் அருந்தியிருந்த இந்த தம்பதி 30000 பிரித்தானிய பவுண்டிற்கு அந்த ஹோட்டலை விலைக்கு வாங்க தீர்மானித்துள்ளனர்.
நாங்கள் நல்ல குடிபோதையில் இருந்தோம். ஊழியர் ஹோட்டலின் வாடகை காலம் நிறைவடைவதாக கூறினார். வருடத்திற்கு 10000 பவுண்ட் வாடகை என ஊழியர் கூறியிருந்தார்.
நல்ல குடிபோதையில் இருந்தாலும், நாங்கள் 3 வருடங்களுக்கு வாடகை அடிப்படையில் பெற்றுகொள்ளலாம் என்ற சிறந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தோம்.
அதற்கமைய ஜுலை மாதம் சட்டரீதியான இந்த கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டோம். ‘Lucky Beach Tangalle’என அதற்கு பெயர் வைத்து சில வேலைப்பாடுகளை மேற்கொண்டோம்.
15000 பவுண்ட் பணத்தை இதுவரை வழங்கியுள்ளோம். மீதி பணத்தை அடுத்த வருடம் மார்ச் மாதம் வழங்கிவிடுவோம். எப்படியிருப்பினும் 7000 பவுண்ட் சட்டரீதியான நடவடிக்கைக்காக செலுத்தியுள்ள நிலையில் 6000 பவுண்ட் பழுது பார்ப்பதற்கு செலவிட்டுள்ளோம்.
நாங்கள் தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து வருகின்றோம்” என இந்த தம்பதியினர் குறிப்பிட்டுள்ளனர்.