ரஷ்யாவில் தான் தத்து வளர்த்து வந்த குழந்தைகளை கற்பழித்த கொடூரனுக்கு நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த விக்டர் லிஷாவ்ஸ்கி (37). இவனது மனைவி ஓல்கா. இவர்கள் பல சிறுவர்-சிறுமிகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் விக்டர் தான் வளர்த்து வந்த 12 முதல் 17 வயது சிறுமிகளை பலமுறை மிரட்டி கற்பழித்துள்ளான். இதனை சிறுமிகளும் பயந்துகொண்டு ஓல்காவிடம் சொல்லாமல் இருந்துள்ளனர்.
நாளுக்கு நாள் காமுகன் விக்டரின் கொடுமைகள் அதிகரிக்கவே, சிறுமிகள் இதுகுறித்து ஓல்காவிடம் கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த ஓல்கா, விக்டர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் விக்டரை கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் காமுகன் விக்டர் சிறுமிகளை 900 முறை கற்பழித்திருப்பது அம்பலமாகியது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காமக்கொடூரன் விக்டருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.