தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி திருக்கோவில் பிரதேசத்தில் பேரணியும், கையெழுத்து வேட்டையும் இன்று நடைபெற்றது.
அம்பாறை திருக்கோவில் வெட்டுக்குளத்துப் பிள்ளையார் ஆலயத்தில் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபாடு செய்து பேரணியாகச் சென் ஊர்வலக்காரர்கள், திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் முன்பாக கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டனர்.
அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் மற்றும் திருக்கோவில் பிரதேசப் பொது மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தனர்.
கருணா அம்மான், கே.பி போன்றோர் இன்று அரசால் விடுவிக்கப்பட்டு சுகபோக வாழ்கை வாழ்ந்து வரும் நிலையில், கட்டளைகளை கேட்டு செய்த சிப்பாய்களை சிறைகளில் அடைத்து வைத்திருப்பது என்ன நியாயம்.? என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர்.
இவர்களை உடனடியாக விடுதலை செய்து கைதிகளும் பந்தபாசம் உணர்வுகள் கொண்டவர்கள் அவர்களும் தமது குடும்பங்களுட்ன் தாய்,தந்தை, மனைவி,குழந்தைகளுடன் இறுதி காலத்தை மகிழ்சியாக வாழ்வதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.