ஆபிரிக்காவின் இளம் செல்வந்தர் என்று கூறப்பட்ட மொஹமத் டஹ்ஜி, முகமூடி அணிந்த துப்பாக்கிதாரி ஒருவரால் தன்சானியாவின் முக்கிய நகரமான தார் எஸ் சலாமில் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகமூடி அணிந்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபடி வந்த கடத்தல்காரர்களால் அவர் கடத்தி செல்லப்பட்டதாகவும் அந்நகரின் தலைமை போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மொஹமத் டஹ்ஜி எதற்காக கடத்தப்பட்டார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. டஹ்ஜியின் சொத்து மதிப்பு 1.5 பில்லியல் டொலர்கள் என குறிப்பிட்டிருந்த போர்ப்ஸ் பத்திரிகை, தன்சானியாவின் ஒரே கோடீஸ்வரர் இவர்தான் என விவரித்திருந்தது. 2017ஆம் ஆண்டு அறிக்கையில், ஆபிரிக்காவின் இளம் கோடீஸ்வரர் மொஹமத் டஹ்ஜி என்று கூறப்பட்டது.