Loading...
இலங்கை அமைவிடமானது பல்வேறு வகையிலும் முக்கியமானதாகவே காணப்படுகின்றது. இவற்றை கருத்தில் கொண்டு இந்து சமுத்திர நாடுகளுடன் இணைந்து பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் அனர்த்தங்களில் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும் வகையில் இம்முறை கொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நடைப்பெறவுள்ளதாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பத்தி தெரிவித்தார்.
இலங்கை விமானப்படையின் ஏற்பாட்டில் ‘ கொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு – 2018 ” எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது.
Loading...
இந்தியா , சீனா , அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட 22 நாடுகளை சேர்ந்த 52 பாதுகாப்பு துறைசார் அதிகாரிகள் இந்த சர்வதேச கருத்தரங்கில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
Loading...