அளவுக்கு அதிமாகவும், தேவையற்ற உணவுகளை சாப்பிட்டதாலும் நம் உடல் எடை எகிறி விடுகிறது. ஆசைக்காக நமக்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டு விட்டு, பிறகு உடல் எடை கூடிவிட்டதே என கவலைப்பட்டால் என்ன நியாயம். பிறகு இதனை குறைக்க படாதபாடு படுகின்றோம். சிலர் செய்கின்ற விபரீத பயிற்சிகள் அவர்களது உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது.
உடல் எடையை குறைக்க இது போல தவறான முறையை தவிர்த்து எளிமையான வழிகள் உள்ளன. அந்த வகையில் வெங்காயம் உங்களது குண்டான உடலை சட்டென குறைக்க உதவும். இந்த பதிவில் கூறியபடி வெங்காயத்தை நீங்கள் பயன்படுத்தினால் எளிதில் உடல் பருமனை குறைத்து விடலாம்.
குண்டாக காரணம் என்ன..?
இன்று உடல் பருமனால் பாதிக்கப்படும் பெரும்பாலானோரின் முக்கிய காரணமாக இருப்பது, உடலில் சேர கூடிய இந்த கெட்ட கொழுப்புக்கள் மற்றும் கொலெஸ்ட்ரோல்களே. ஒருவரின் உடலில் LDL எனப்படும் கெட்ட கொழுப்புகள் அதிகமாகி விட்டால் உடல் எடை அபரிமிதமாக ஏறி கொண்டே போகுமாம். இதுதான், நீங்கள் குண்டாக இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
உடல் எடையை குறைக்கும் வெங்காயம்..!
வெங்காயத்தை குறிப்பாக உடல் எடையை குறைக்க பயன்படுத்தலாம் என உடல்நல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இதில் உள்ள ஊட்டச்சத்துக்களே உடல் எடையை கச்சிதமாக வைத்து கொள்ளுமாம்.
- நீர்சத்து
- நார்சத்து
- ஷவைட்டமின் சி
- பொட்டாசியம்
- சல்பர்
- போலேட்
- வைட்டமின் பி9
- வைட்டமின் பி6
வெங்காய சாறு…
உடல் எடையை குறைக்க இந்த வெங்காய சாறு நன்கு உதவும். இதனை தொடர்ந்து குடித்து வந்தாலே உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து நீங்கள் கச்சிதமான உடல் எடையை பெற்று விடுவீர்கள்.
தேவையானவை
- வெங்காயம் 1
- நீர் 3 கப்
செய்முறை
முதலில் வெங்காயத்தை நன்றாக நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நீர் சேர்த்து கொண்டு, நறுக்கிய வெங்காயத்தை அதனுள் போட வேண்டும். இதனை இப்படியே 5 நிமிடம் கொதிக்க விட்டு இந்த நீரை வடிகட்டி கொள்ளவும். இந்த நீரை தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.