வள்ளி படத்தில் அறிமுகமான பிரியா ராமன் சூரியவம்சம், சின்னராஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது மிக நீண்ட கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையுலகிற்கு வந்துள்ளார். செம்பருத்தி சீரியல் மூலம் மீண்டும் மக்கள் மனதில் அகிலாண்டேஸ்வரியாக அறிமுகமாகியுள்ளார்.
இவரின் சினிமா பயணம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரியா ராமனின் வாழ்கை மிகவும் போராட்டம் மிகுந்ததாக ஆரம்பத்தில் இருந்துள்ளது.
போராடி பல சாதனைகளை புரிந்த அவர் திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்தியிருந்தார்.
பிரியா ராமன், நடிகர் ரஞ்சித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இணைந்து ‘நேசம் புதுசு’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது, இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
கடந்த 1999ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் திகதி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஆதித்யா, ஆகாஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
எனினும், ரஞ்சித்துக்கும், பிரியா ராமனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2014ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிடும் போது அவர் வாழ்க்கையில் நடந்த சுவாராஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.
அவர் வாங்கிய முதல் சம்பளத்தை இன்னும் பத்திரப்படுத்தி வைத்துள்ளதாக கூறியுள்ளார். அது அவர் வாழ்க்கையில் கிடைத்த மறக்க முடியாத அதிர்ஷ்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அவருடைய காதல் வாழ்க்கை விவாகரத்துடன் முடிவு பெற்றது, இன்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், இன்று பல இல்லத்தரசிகளுக்கு எடுத்துக் காட்டாக அவரின் கதாப்பாத்திரம் மாறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.