சுவிட்சர்லாந்தில் குடியிருப்பில் தனியாக இருந்த இளைஞரை வெளியே வரவழைத்து மர்ம கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாழனன்று மாலை குறித்த இளஞருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்தே அந்த மர்ம கும்பல் குடியிருப்பு தேடி வந்து தாக்குதலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட 21 வயது இளைஞர் தெரிவித்துள்ளார்.
குடியிருப்பில் தனியாக இருந்த இளைஞரை யாரோ அழைத்துள்ளனர். மட்டுமின்றி குடியிருப்புக்கு வெளியே வரவழைக்கவும் அவர்கள் செய்துள்ளனர்.
இதனிடையே திடீரென்று அந்த கும்பலில் ஒருவர் பேஸ்பால் மட்டையால் தலையில் பலமாக தாக்கியதாகவும், தொடர்ந்து கையால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
மேலும் அவர்கள் வந்த வாகனத்தில் தம்மை ஏற்றிச் செல்ல முயன்றதாகவும், அப்படி நடந்திருந்தால் தம்மை அவர்கள் கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அந்த கும்பலில் இருவர் திடீரென்று கத்தியை உருவி கால்களை குறிவைத்து தாக்கியதாகவும், இதில் சுமார் 50 செ.மீற்றர் நீளத்தில் 3 முறை கத்தியால் கிழித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர்கள் சம்பயிடத்தில் இருந்து தப்பியதும், மிகவும் பிரயாசைப்பட்டு பொலிசாருக்கும் மருத்துவ உதவிக்கும் அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த சூரிச் நகர பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் அந்த இளைஞர் குர்து இனத்தை சார்ந்த சுவிஸ் குடிமகன் எனவும்,
தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் மூவரை சூரிச் மாகாண பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.