உள்நாட்டு நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஒரு கிலோ அரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க அரிசி உற்பத்தியாளர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் தமக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய அரிசி உற்பத்தியாளர்களினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க அரிசியை பொதிசெய்யும் இடங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அமைச்சருடன் அவ்வாறானதொரு இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என சிறு மற்றும் மத்தியதர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிஸாந்த டீ. அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.