15-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 29ம் திகதி, ஸபர் 5ம் திகதி, 15-10-2018 திங்கட்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி காலை 10:10 வரை; அதன் பின் சப்தமி திதி மூலம் நட்சத்திரம் மாலை 6:09 வரை;
அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த–சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீரிடம்
பொது : நவராத்திரி 6ம் நாள், அம்பிகையை சண்டிகாதேவி வழிபடுதல், சூரியன் வழிபாடு, கரிநாள்.
மேஷம்:
அடுத்தவரின் தவறால் சிரமத்திற்கு ஆளாகலாம். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற தாமதம் உண்டாகும். வருமானம் சுமார். பணியாளர்கள் சகஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். பெண்கள் உடல்நலனுக்காக சிகிச்சை மேற்கொள்வர்.
ரிஷபம்:
எதிர்பார்த்த நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் திட்டமிட்ட பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம். பெண்கள் அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.
மிதுனம்:
உறவினரிடம் குடும்ப விஷயம் பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பால் அனுகூலம் காண்பீ்ர்கள். லாபம் படிப்படியாக உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தின் நன்மதிப்பை பெறுவர். பெண்கள் சுபச்செலவு செய்து மகிழ்வர்.
கடகம்:
எதிரியால் இருந்த தொல்லை மறையும். புதிய முயற்சியில் ஈடுபட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். உபரி பணவருமானம் கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உண்டு. பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
சிம்மம்:
நண்பர்கள் எதிர்பார்ப்புடன் உங்களை அணுகுவர். தொழில், வியாபார நடைமுறையில் தேக்க நிலை ஏற்படலாம். திடீர் செலவால் சேமிப்பு கரையும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் வேண்டும். பெண்கள் பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.
கன்னி:
பேச்சு, செயல்களில் ஆடம்பரத்தை தவிர்க்கவும். தொழில், வியாபார நடைமுறை சீராக இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் பிள்ளைகளின் வகையில் செலவு ஏற்படலாம்.
துலாம்:
நண்பர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். லாபம் உயரும். பணியாளர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவால் பாராட்டு, பரிசு கிடைக்கும். பெண்கள் விருந்து விழாவில் பங்கேற்பர்.
விருச்சிகம்:
அவசரப்பணியால் நெருக்கடி உருவாகலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணியாளர்களுக்கு பணத்தேவை அதிகரிக்கும். பெண்கள் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பெற்றோரின் வழிகாட்டுதல் நிம்மதிக்கு வழிவகுக்கும்.
தனுசு:
மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். செயல்களில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் சார்ந்த நிலுவைப் பணி நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
மகரம்:
அறிமுகம் இல்லாதவருடன் பேசுவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். பணவரவு சுமார். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.
கும்பம்:
நேர்மை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். தாராள அளவில் வருமானம் கிடைக்கும். குடும்பத் தேவை குறைவின்றி நிறைவேறும். பெண்கள் பிள்ளைகளின் நற்செயலால் மகிழ்ச்சியடைவர்.
மீனம்:
கடந்த கால அனுபவத்தால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி உண்டாகும். உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். பெண்கள் கணவரின் அன்புக்குரியவராவர்