வவுனியாவில் பேரூந்துடன் மோதுண்டு இராணுவ சிப்பாய் பலி!
வவுனியாவில் இன்று (15 காலை ஓமந்தைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவச்சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஓமந்தை இறம்பைக்குளம் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவச்சிப்பாயே உயிரிழந்துள்ளார்.
சைக்கிள் ஓட்டப் போட்டியில் ஈடுபடும் இராணுவச் சிப்பாய்கள் சிலர் இன்று காலை வழக்கம் போல பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏ9 பிரதான வீதியில் இவர்கள் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மாடு குறுக்காக பாய்ந்துள்ளது. இதனால் நிலைகுலைந்து குறித்த சிப்பாய் வீழ்ந்த போது, பின்னால் வந்த பேருந்து அவரை மோதியுள்ளது.
சம்பவ இடத்திலேயே இராணுவச் சிப்பாய் உயிரிழந்துள்ளார்.
பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.