இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வீரர் Olly Stone, காயத்திலிருந்து மீண்டு வந்து விளையாடியதால் தனது கனவு நிறைவேறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் Olly Stone அறிமுகமானார்.
ஆனால், அந்த போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் Olly Stone விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
அதன் பின்னர், கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியிலும் மழை குறுக்கிட்டது. இங்கிலாந்து அணி நிர்ணயித்த 279 ஓட்டங்கள் இலக்கை நோக்கிய ஆடிய இலங்கை, 29 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
பின்னர் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி, இங்கிலாந்து 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் 6 ஓவர்கள் வீசிய Olly Stone, 23 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இலங்கையின் தொடக்க வீரர் டிக்வெல்லாவின் விக்கெட் தான் அவருக்கு முதல் சர்வதேச விக்கெட்டாக அமைந்தது. இந்நிலையில், இந்தப் போட்டி குறித்து Olly Stone கூறுகையில்,
‘நான் காயமடைந்தபோது, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தான் நீங்கள் இங்கிலாந்து அணியில் விளையாடுவீர்கள் என்று ஒருவர் கூறினார். அப்போது நான் அவரது கையை முறித்திருப்பேன், இப்போது அது பைத்தியகாரத்தனமாக தெரிகிறது.
என்னுடைய கனவு பலித்து விட்டது. இது சில மாதக்கணக்கான சூறாவளி மற்றும் அதை நான் விரும்புகிறேன். துடுப்பாட்ட வீரர்களை பார்ப்பது எப்போதும் சிறந்த உணர்வு. வீசும் ஒளியில் சிலவற்றை பிடித்து வைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகக் கிண்ண அணியில் தனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக Olly Stone தெரிவித்துள்ளார். முன்னதாக, உலகக் கிண்ண தொடரில் ஆட்டத்தையே மாற்றியமைக்கும் வீரராக Olly Stone இருப்பார் என இங்கிலாந்து அணித்தலைவர் இயான் மோர்கன் கூறியது குறிப்பிடத்தக்கது.