புதுமாப்பிள்ளை வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Massachusetts மாகாணத்தை சேர்ந்த ஜோஷ் பைரின் என்பவருக்கும் பயங்கா என்ற பெண்ணுக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் பின் தேனிலவு கொண்டாட புதுமண தம்பதிகள் Costa Rica நாட்டுக்கு சென்றனர்.
அங்கே கனமழை பெய்து வந்த நிலையில் அங்குள்ள கடற்கரையை ஓட்டியுள்ள பாலத்தை இருவரும் கடக்க முயன்ற போது ஏற்பட்ட வெள்ளத்தில் ஜோஷும், பயங்காவும் அடித்து செல்லப்பட்டனர்.
பயங்கா அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நிலையில் ஜோஷ் காணாமல் போனமையைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணி இடம்பெற்றது.
இந்த நிலையில் நேற்று ஜோஷ் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கணவரின் சடலத்தை பார்த்து பயங்கா கதறியது பார்ப்போரை கலங்கடித்துள்ளது.
இதனிடையில் ஜோஷின் இறுதிச்சடங்குக்கு GoFundMe இணைய பக்கம் மூலம் பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.