27-வது மாடியில் இருந்து செல்பி எடுக்க முயற்சி செய்ததால் அங்கிருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியான பெண்மணியின் குடும்பத்தினருக்கு பலரும் ஆழ்ந்த இரங்கல்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
2 குழந்தைகளுக்கு தாய் வயது மதிக்கத்தக்க, சாண்ட்ரா மெனூலா என்பவர், அண்மையில்தான், போர்ச்சுகலின் வடக்கு மாகாணத்திக் இருந்து பனாமா நகரத்துக்கு புலம் பெயர்ந்த ஆசிரியை. இவர் தான் தங்கியிருந்த 27-வது மாடியில் இருந்து செல்ஃபி எடுக்க முயற்சித்தபோது அருகில் இருந்த பில்டிங்கின் கீழ் கன்ஸ்ட்ரக்ஷன் பணிகளை செய்துகொண்டிருந்த சிலர் அவர் கீழே விழும் வீடியோவை அவசர கதியில் எடுத்துள்ளனர்.
முன்னதாக செல்ஃபி எடுக்க முயற்சி செய்தபோதே, கன்ஸ்ட்ரக்ஷன் ஊழியர்கள் கீழிருந்து சத்தம் போட்டு, ஆபத்து என எச்சரித்துள்ளனர்.
ஆனாலும் சாண்ட்ரா சற்றே அமர்ந்த தொனியில் செல்ஃபி எடுக்க முயன்றபோது தவறி 27வது மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவர் விழுந்தபோதும் கூட அவர் கையில் செல்ஃபி ஸ்டிக் இருந்ததாக அருகில் இருந்தவர்கள் குறிபிட்டுள்ளனர். மேலும் குழந்தைகள், இதயம் பலவீனமானவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்பதால் அந்த வீடியோவினை இணையத்தில் ரெஸ்ட்ரிக்டஷன் மோடில் வைத்திருக்கின்றனர்.