Loading...
சீனாவில் உள்ள பிரபல வங்கி ஒன்றினுள் புகுந்த இராட்சத பைதன் ரக பாம்பு வங்கி ஊழியர்களை திக்குமுக்காடச் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினத்தன்று காலை நேர கடமைக்கு தயாரான ஊழியர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ ஒன்றுகூடலின்போது எதிர்பாராத விதமாக மேற்கூரையில் இருந்து பைதன் பாம்பு ஒன்று ஊழியர்களுக்கு மத்தியில் விழுந்துள்ளது.
Loading...
இதனால் சற்று நேரம் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் சுதாகரித்துக்கொண்ட ஊழியர்கள் 1.5 மீற்றர்கள் நீளமான அப் பாம்பினை பிடித்து பை ஒன்றினுள் அடைத்து எடுத்துச் சென்று காட்டுப் பகுதியில் விட்டுள்ளனர்.
மிகவும் பாதுகாப்பாக காணப்படும் கட்டிடத்தினுள் இவ் இராட்சதப் பாம்பு நுழைந்திருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading...