Loading...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் 3 தலைமுறைகளாக ராமலீலா நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
லக்னோவைச் சேர்ந்த முகம்மது ஷபீர் கான் குடும்பத்தினர் கடந்த 1972ம் ஆண்டு ராமலீலா என்ற பெயரில் ராம அவதாரத்தின் சிறப்புகள், ராவணன் உடனான போர் போன்ற நிகழ்ச்சிகளை தத்ரூபமாக நடித்து வருகின்றனர். அனைத்து மதங்களும் அன்பைப் போதிப்பதாகவும், இந்த நாடகத்தின் மூலம் இந்து, முஸ்லீம்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் இருப்பதாகவும் ஷபீர் கான் கூறியுள்ளார்.
Loading...
மதவெறி உச்சத்தில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஷபீர் கான் போன்றவர்களின் சில செயல்கள் மக்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Loading...