Loading...
மர்ம நபர்கள் சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி, பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், போலீசில் புகார் அளித்துள்ளார்.
அம்பத்தூர் இணை ஆணையர் விஜயகுமாரியிடம் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இன்று புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ஐயப்பன் தாங்கலில் உள்ள பிரஸ்டீஜ் பெல்லா விஷ்டா என்ற அடுக்குமாடி குடியிருப்பில் தான் வசித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
அந்த குடியிருப்பில் உள்ள 1300 குடும்பங்களுடன் சேர்ந்து நலச்சங்கம் துவங்க முயற்சிப்பதால் தனக்கு சிலர் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுப்பதாக லட்சுமி ராமகிருஷ்ணன் மனுவில் புகார் கூறியுள்ளார்.
Loading...