முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மேலும் மூன்று பேரை நிரபராதியாக்கி குருநாகல் மேல்நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இன்று விடுதலை செய்துள்ளார்.
குறித்த வழக்கு கடந்த 9 ஆம் திகதி இறுதியாக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ, தமது கட்சிக்காரர்களை நிரபராதியாக்கி விடுதலை செய்யுமாறு நீதிமன்றத்தை கோரியிருந்தார்.
இதுதவிர முறைப்பாட்டாளரின் சாட்சிகள் ஒன்றுக்கு ஒன்று முரணானது என சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
குருநாகல் சதொச நிறுவனத்திற்கு சொந்தமான யன்தம்பலாவ கிளையில் 2013 ஆம் ஆண்டு பணம் செலுத்தாது பொருள் கொள்வனவு செய்யப்பட்டதாக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.