ஆறு வயது சிறுமி ஜைனாப் அன்சாரியை பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்த நபரிற்கு பாக்கிஸ்தான் இன்று தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளது.
பாக்கிஸ்தானை பலத்த அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஜைனாப் கொலைக்குற்றவாளி இம்ரான் அலிக்கு லாகூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் கருத்து தெரிவித்துள்ள ஜைனாப்பின் தந்தை தான் திருப்தியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவரின் மரணத்தை நான் கண்ணால் பார்த்தேன் என அமின் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை எனது மகளின் மரணத்திற்கு காரணமானவரிற்கு மரணதண்டனை தொலைக்காட்சியில் ஒலிபரப்பவில்லை என்பதே எனது கவலை எனவும் ஜைனாப்பின் தந்தை தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தான் கசூர் நகரில் பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்த ஜைனாப் அன்சாரி காணாமல்போன பின்னர் நான்கு நாட்களிற்கு பின்னர் குப்பைதொட்டியொன்றில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
ஏற்கனவே பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட கசூர் நகரில் இந்த சம்பவம் கடும் எதிர்வலைகளை தோற்றுவித்தது பின்னர் பாக்கிஸ்தான் முழுவதும் இதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன
இதன் பின்னர் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை அடிப்படையாக வைத்து 24 வயது இம்ரான் அலி கைது செய்யப்பட்டிருந்தார். இம்ரான் அலியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரைகளின்போது அவர் இதுபோன்ற பலகுற்றங்களை செய்திருப்பது தெரியவந்தது.