மட்டக்களப்பு ரெலிகொம் வீதியில் சிகையலங்கார நிலையம் வைத்திருந்த தமிழ் இளைஞர் ஒருவர் தனது கடையினுள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்
பிரதேசத்தில் சலூன் ஒன்றில் தூக்கில் தொங்கிதற் கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (17) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
தாளங்குடாவைச் சேர்ந்த 18 வயதுடைய வசீகரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி ரெலிக்கோம் வீதியில் உள்ள சலூனில் கடமையற்றி வந்த குறித்த இளைஞர் சம்பவதினமான இன்று வழமைபோல
கடையில் தனது வேலையைச் செய்துவந்துள்ள நிலையில் பகல் ஒரு மணியளவில் கடையின் பின்பகுதிக்கு சென்றவர் அதிகநேரமாகி திரும்பி வரவில்லை.
அங்கு சென்றபோது கடையின் கூரையில் கயிற்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் காதல் பிரச்சனை காரணமாக கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.