80களில், இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு முதல் படத்திலேயே பிரபலம் ஆன நடிகைகளில் ரேகாவும் ஒருவர்.
இவர் 1970ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். இவருக்கு 16 வயது இருக்கும்போது சத்தியஜுடன் பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தில் ஹீரோயினாக நடித்தார் ரேகா.
இந்த படத்தில் நடிகை ரேகா ஜெனிபர் டீச்சர் என ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். இந்த டீச்சர் கேரக்டர் இன்று வரை பலரால் பேசப்படும் ஒரு கேரக்டராகும்.
தனது முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த ரேகா அதன்பின்னர் தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார். தமிழில் புன்னகை மன்னன், எங்க ஊரு பாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, நினைவே ஒரு சங்கீதம், கதா நாயகன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர் என பல ஹிட் படங்களில் நடித்தார்.
1996ஆம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ரேகா. ரேகாவின் கணவர் ஜார்ஜ் மீன் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து, 1998 ஆம் ஆண்டு இந்த தம்பதிகளுக்கு அனுஷா ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அனுஷா தற்போது சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
திருமணத்திற்கு பின்பு நடிப்பில் நிறுத்திய ரேகா மீண்டும் 2002 ஆம் ஆண்டு சினிமாவில் கதாநாயகர்களின் அம்மா கேரக்டரில் காலடி எடுத்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் கலக்கி வருகிறார்.
பின்பு, கடந்தாண்டு வெளியான நடிகர் கார்த்தி நடித்த முத்துராமலிங்கம் படத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்பு, இந்தாண்டு மட்டும் இவர் 4 தமிழ் படங்களிலும், ஒரு மலையாள படத்திலும் நடித்துள்ளார். அதில் கடைசியாக ப்யார் ப்ரேமா காதல் படத்தில் நடிகர் ஹரிஸ் கல்யான் அம்மா கதாப் பாத்திரத்தில் நடித்திருந்தார்.