ஆயுதங்களை வைத்து வழிபடும் ஆயுதபூஜைக்கு பின்னணி உள்ளது. எதற்காக இந்த நாளில் ஆயுதங்களை வைத்து வழிபடுகிறோம் என்று தெரியுமா?
முந்தைய காலங்களில் ஆயுதங்கள் தான் அனைவருக்கும் ஆகச் சிறந்த நண்பன். ஆயுதங்கள் இல்லாமல் யாரையும் பார்க்க இயலாது. வேட்டையாட பயன்படுத்தப்பட்ட காலத்தில் தற்போது தற்காத்து கொள்ளும் காலம் வரை ஆயுதம் அழையா விருந்தாளியே. நாம் வணங்கும் தெய்வம் கூட கையில் ஆயுதத்தோடு தான் இருக்கிறது.
பயன்படுத்தும் ஆயுதத்தை வணங்குவது என்பது அப்போதைய பழக்கமாக இருந்தது அது தொடர்ந்து இப்போது ஆயுதபூஜையாக மாறியுள்ளது. முன்னோர்கள் காலத்தில் அவர்கள் பயன்படுத்திய ஆயதங்கள் எல்லாம் அதற்கு முன் இருந்தவர்களின் எலும்பினாலோ அல்லது உடலின் உள்ள பிற பாகங்களினாலோ செய்தவையாக இருக்கக்கூடும். அதில் உள்ள ரத்தகரையை வைத்து தான் அவர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்பதை கண்டறிவர்.
அதன் காரணத்தினாலே அப்போது ஆயுதங்களை வைத்து வணங்குவர்.
அப்போது தொட்டு இன்று உள்ள அனைத்து மனிதருக்கும் உதவுவது கருவிகளே. முன்பு ஆயுதம் இப்போது இயந்திரம், வித்தியாசம் பெரிதல்ல ஆனால் உபயோகிக்கும் முறை மாறியுள்ளது.
நமக்கு உதவியதை, நமக்கு பயனுள்ளதாக இருந்ததை நாம் வணங்க வேண்டுமல்லவா அதற்கான ஒரு நாள் ஆயுதபூஜை. குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வம் எதுவாக இருந்தாலும் அதன் கையில் ஆயுதம் இல்லமால் பார்ப்பது அரிது. அதனை வணங்கும் போது, தெய்வம் வைத்திருக்கும் ஆயுதத்திற்கும் சேர்த்தே வழிபாடு செய்கிறோம்.
கருவிகளை வணங்குவது என்பது நம்முடைய மரபாகும். பயன்படுத்தும் கருவி மட்டுமல்ல, இயந்திரங்களும் அதில் அடங்கும். யார் எந்த கருவியை பயன்படுத்தினாலும் அல்லது இயந்திரங்களை அலுவலகத்தில் உபயோகப்படுத்தினாலும் வழிபாடு ஒன்று தான்.
தொழில்நுட்பம் வளர்ந்தாலும் நவீன வளர்ச்சி ஆனாலும் வழிபாடு, பண்பாடு என்பது எத்தனை மரபு வந்தாலும் மறையாது. அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதற்கு ஆகச் சிறந்த உதாரணம் தான் ஆயுதபூஜை வழிபாடு. “சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்பது போல சிறு கருவி அல்லது ஆயுதம் எதுவாக இருப்பினும் உதவக்கூடியதே.