Loading...
தெற்கு ஆஸ்திரேலியாவில் 58 பெங்குவின்கள் திடீரென மாண்டு கிடந்தன. அவற்றை நாய் கடித்துக் குதறியிருக்கலாம் என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
டாஸ்மேனிய கடற்கரையில் மாண்டு கிடந்த பெங்குவின்கள் ஃபேரி வகையைச் சேர்ந்தவை. அவை தோற்றத்தில் சிறியவை.
நாய்களால் பல பெங்குவின்கள் பாதிக்கப்படலாம். எனவே, பெங்குவின்கள் கூட்டமாக வசிக்கும் இடங்களில் நாய் உரிமையாளர்கள் அதிகப் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.
Loading...
சில மாதங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 12 பெங்குவின்கள் நாய் கடித்து மாண்டுபோனதாக நம்பப்படுகிறது.
அதிகரித்து வரும் நகர மயமாக்கல், போக்குவரத்து, வீட்டு விலங்குகளின் தொல்லை ஆகிய காரணங்களால் ஃபேரி பெங்குவின் கூட்டம் பெரும் அச்சுறுத்தலில் உள்ளது.
Loading...