18-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 1ம் திகதி, ஸபர் 8ம் திகதி, 18-10-2018 வியாழக்கிழமை, வளர்பிறை, நவமி திதி மதியம் 3:52 வரை; அதன் பின் தசமி திதி, திருவோணம் நட்சத்திரம் இரவு 1:35 வரை;
அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்
பொது : திருவோண விரதம், நவராத்திரி 9ம்நாள், அம்பிகையை பரமேஸ்வரியாக வழிபடுதல், தட்சிணாமூர்த்தி, பெருமாள் வழிபாடு,
சரஸ்வதி, ஆயுத பூஜை, நல்ல நேரம் காலை 10:30-12:00 மணி.
மேஷம்:
ஆறுதல் பேச்சால் நண்பரின் பிரச்னை தீர்ப்பீர்கள். அன்றாடப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழிலின் அபரிமிதமான வளர்ச்சியால் பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர். பெண்கள் புத்தாடை, அணிகலன் வாங்குவர்.
ரிஷபம்:
நிதானித்து பேசுவது நல்லது. தொழில், வியாபாரம் திட்டமிட்ட இலக்கை அடைய அவகாசம் தேவைப்படும். அதிக நிபந்தனையுடன் கடன் பெற வேண்டாம். பணியாளர்கள் சட்டதிட்டத்தை மதித்து நடக்கவும். பெண்களுக்கு தாய் வீட்டாரின் உதவி கிடைக்கும்.
மிதுனம்:
சிலரது பேச்சால் அதிருப்திக்கு ஆளாகலாம். தொழிலில் விடாமுயற்சியால் சீரான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
கடகம்:
மனதில் உதித்த திட்டம் செயல் வடிவம் பெறும். உற்சாகமுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து வளரும். உபரி பணவரவால் சேமிப்பு கூடும். பெற்றோரின் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.
சிம்மம்:
மாறுபட்ட கருத்து உள்ளவர்களிடம் விலகுவது நல்லது. திட்டமிட்ட பணி நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும். தொழிலில் லாபம் சுமாரான அளவில் இருக்கும். பெண்களுக்கு திடீர் செலவால் சேமிப்பு கரையும். யாருக்கும் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.
கன்னி:
பணிகள் நிறைவேற தாமதம் ஏற்படலாம். நலம் விரும்புபவரின் ஆலோசனையால் நன்மை காண்பீ்ர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவில் தாராளம் பின்பற்றுவர். ஒவ்வாத உணவு உண்ணக் கூடாது.
துலாம்:
அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். தொழிலில் உருவாகிற இடையூறுகளை அவ்வப்போது சரிசெய்யவும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.
விருச்சிகம்:
லட்சியம் நிறைவேற திட்டம் தீட்டுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும்.உபரி வருமானத்தால் சேமிப்பு உயரும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.
தனுசு:
சவால்களை ஏற்று செயல்படும் எண்ணம் மேலோங்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேறும்.பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.
மகரம்:
ஆன்மிக சிந்தனையுடன் பணிபுரிவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு சிறக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பெண்கள் விருந்து, விழாவில் பங்கேற்பர்.
கும்பம்:
அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். அதிக நிபந்தனையுடன் கடன் பெற வேண்டாம். பணியாளர்கள் சக ஊழியர்களால் நெருக்கடிக்கு ஆளாகலாம். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.
மீனம்:
பணிகளில் கூடுதல் அக்கறை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் பிள்ளைகளின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவர்.