பனிக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சரும வறட்சி உண்டாகும். இதை தவிர்க்க உள்ளுக்கு சத்துள்ள உணவு எடுத்து கொள்வதோடு, இயற்கையோடு கூடிய நிவாரணம் அளிப்பது அவசியம்.
* தக்காளி சாறு, தேன், முல்தானி மட்டி போன்றவைகளை சேர்த்து கிரீம் போல் அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். வறண்ட சருமம் இதன் மூலம் பொலிவு பெறும்.
* வாழைப்பழம், பப்பாளிப்பழம், ஆரஞ்சு பழம் போன்றவைகளை சேர்த்து அதில் அரை தேக்கரண்டி முல்தானி மட்டி பவுடர் சேர்த்து கிரீம் போல ஆக்கி முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள்.
* ஓட்ஸ், பார்லி, சோயா மில்க் போன்றவைகளை சேர்த்து பேக் போடலாம்.
* கேரட் சாறில் முல்தானி மட்டி பவுடர் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.
* பாலாடை, ஆப்பிள் இரண்டையும் சேர்த்து சருமத்தில் பூசுவதும் வறண்ட சருமத்துக்கு பொலிவை ஏற்படுத்தும்.
* பப்பாளி, ஆப்பிள் பழங்கள் தொடர்ந்து சாப்பிடுவதால், அதிகம் தண்ணீர் குடிப்பதும் சருமத்திற்கு ஆரோக்கியம் தரும். குறிப்பாக வறண்ட சருமத்தினருக்கு ஆரோக்கியம் தரும்.<