Loading...
பள்ளி விடுதியில் மாணவிகளுக்கு உணவு சமைத்து கொடுத்து வந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
மதுரை காமராஜர்சாலை- குருவிக்காரன் சாலை சந்திப்பில் தனியார் பெண்கள் பள்ளி உள்ளது. இந்த பள்ளியிலேயே மாணவிகளுக்கான விடுதியும் உள்ளது. இங்கு தங்கி படிக்கும் மாணவிகளுக்கு, ராஜபாளையத்தை சேர்ந்த முத்துமாரி(வயது 20) என்பவர் உணவு சமைத்து கொடுத்து வந்தார்.
Loading...
இந்தநிலையில் அவர் பள்ளி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. இது குறித்து தெப்பகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Loading...