குலசேகரம் அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டெம்போ டிரைவருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு உத்தரவிட்டது.
குலசேகரம் அருகே உள்ள வண்டிபிலாங்கால விளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 32). டெம்போ டிரைவர். இவர் 8.1.2016-ந் தேதி பக்கத்து ஊரை சேர்ந்த 13 வயது சிறுமியை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக அழைத்து சென்றார். அப்போது அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
இது குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து நாகர்கோவிலில் உள்ள மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்
வழக்கை விசாரித்த நீதிபதி ஜாண் ஆர்.டி. சந்தோசம் குற்றஞ்சாட்டப்பட்ட விஜயகுமாருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.