முன்னாள் காவற்துறை பிரதி மா அதிபர் நாலக்க டி சில்வா இன்றையதினமும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
கொலை சதித்திட்ட குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் நாலக்க டி சில்வாவிடம் நேற்று சுமார் எட்டரை மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாலக்க டி சில்வா, நேற்றையதினம் தினம் முதலாவது முறையாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.
முற்பகல் 9.30 அளவில் அங்கு முன்னிலையான அவரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கான சதித் திட்டம் குறித்து பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் நாலக்க டி சில்வாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.