Loading...
மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிவரும் பெரியநீலாவளையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய ஆசிரியர் ஒருவரை பாலியல் துஸ்பிரயோக வழக்கில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் தரம் 11 கல்வி கற்றுவரும் மாணவியை கையடக்கத் தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்து அதனூடாக சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி பாடசாலையில் வைத்து துஸ்பிரயோகம் செய்தார் என மாணவி பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்தே இவர் கைதாகியுள்ளார் .
Loading...
கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...