ஓமான் பொலிஸ் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
உலக பொருளாதாரத்துறை சார்பில் உலக அளவில் 12 துறைகளில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியல் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சுற்றுலாவுக்கு உகந்த நாடுகளின் பட்டியலில் மிகவும் பாதுகாப்பான நாடு என ஓமான் முதலிடத்தை பிடித்துள்ளது. மொத்தம்140 நாடுகளின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில் இதுவரை ஓமானில் எந்தவித பயங்கரவாத செயல்களோ அல்லது அசம்பாவிதங்களோ நடைபெறவில்லை என்பதை தெரிவிக்கிறது.
அது மட்டுமல்லாமல் அரபு நாடுகளில் சிறந்த பொலிஸ் சேவைக்கான பட்டியலில் ஓமான் பொலிஸ் 5வது இடம் பிடித்துள்ளது .
உலக அளவில் ஓமான் நாடானது மிகவும் பாதுகாப்பான நாடு என்பதை இந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பாதுகாப்புதுறையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.