ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட டிட்லி புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. (Total 57 people died dueto Titli Cyclone)
வங்கக்கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டிணத்துக்கும் இடையே கடந்த 11 ஆம் திகதி கரையைக் கடந்தது.
இதனையடுத்து, பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருவதுடன், வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதம் சுமார் 2,765 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.