சபரிமலை கோவிலில் பண்பாடு தான் முக்கியம் பெண் பாடு முக்கியமில்லை என தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில், ‘அய்யப்பன் கோயிலின் பன்னெடுங்காலமாக பழக்கப்பட்டுவரும் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும்.
அங்கு பெண்பாடு முக்கியமில்லை. பழக்கப்பட்டுவரும் பண்பாடுதான் முக்கியம். இது மூட நம்பிக்கையல்ல. முடிவான நம்பிக்கை. இது தீர்க்கக்கூடிய நம்பிக்கையல்ல. தீர்க்கமான, தீவிரமான நம்பிக்கை என்றும் அவர் கூறியுள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடர்வதால் இன்று வரை பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
இதற்கிடையே கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், பக்தர்களின் போராட்டம் காரணமாக பெண்கள் பிரவேசிக்க முடியாத நிலை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.