Loading...
11 தமிழர்கள் கடத்தப்பட்ட வழக்கின் பிரதான சந்தேக நபர்நேவி சம்பத்தை வெளிநாடு சென்றுவர உதவிய குற்றச்சாட்டில் பாதுகாப்பு படைகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளது என்று புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போதே புலனாய்வு பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
Loading...
ரவீந்திரவை கடந்த நாட்களில் கைது செய்யவும் விசாரணை மேற்கொள்ளவும் புலனாய்வு பிரிவினர் முயற்சித்த போதும் அரசாங்கத்தின் உயர் மட்ட தலையீடுகளினால் அவை தடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...