யாழ் கரம்பொன் சிறிய புஸ்பம் பெண்கள் மகா வித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா 18.10.2018 வியாழக்கிழமை மதியம் 1.30 மணிக்கு வித்தியாலய அதிபர் அருட்சகோதரி றொசாறி செபஸ்ரியன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும் மண்டைதீவு அல்லைப்பிட்டி பங்குத் தந்தையுமான அருட்பணி மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளாரும், கௌரவ விருந்தினர்களாக ஊர்காவற்றுறை பிரதேசசபை இளைஞர் சேவை அதிகாரி சந்திரசேகரம் ரேகபாகர் மற்றும் ஊர்காவற்றுறை இலங்கை வங்கி முகாமையாளர் . றெனோல்ட் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
முதலில் விருந்தினர்கள் மாலை அணிவித்து பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்துவரப்பட்டு, முறையே மங்கள விளக்கேற்றல், இறை வணக்கம், வரவேற்புப் பாடல், வரவேற்பு நடனம் என்பவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
வரவேற்புரையைத் தொடர்ந்து, அதிபர் அருட்சகோதரி றொசாறி செபஸ்ரியன் அவர்கள் அவ்வாண்டிற்கான அறிக்கையினை வாசித்தளித்தார்.
அதனையடுத்து தொடர்ந்து போட்டிகளில் வலயம், கோட்டம், மாவட்டம், மாகாணம், தேசிய மட்டங்களில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் க.பொ.த (சா/த), க.பொ.த (உ/த), புலமைப்பரிசில் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள், வகுப்பு ரீதியாக முதல்நிலை மாணவர்கள் என மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.