இரும்புக் கட்டிகள்மீது தங்க முலாம் பூசி விற்பனை செய்துவந்த சந்தேகிகள் மூன்றுபேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.களுத்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெயப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து அதிக தொகையிலான இரும்புக் கட்டிகள் தங்கமுலாம் பூசப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.மீஹதென்ன என்ற பிரதேசத்தில் சுமார் 450 தங்கக் கட்டிகளை விற்பனை செய்ய முற்பட்டபோது சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய இவர்கள் சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகிகளிடமிருந்து மகிழுந்து ஒன்றும் கூரிய ஆயுதமொன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை மிக கனதியாக தங்க முலாம் பூசப்பட்ட ஆபரணங்கள் தங்கம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு விற்கப்படுவதால் இதுதொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.