பச்சை நிற அரிசியாக உள்ள மூங்கில் அரிசி மூங்கிலில் உள்ள சத்துகளை கொண்ட சிறிய அளவிலான அரிசியாக திகழ்கிறது. இனிப்பு சுவையுடன் கூடிய மூங்கில் அரிசி உறுதியானது என்பதுடன், ஊட்டச்சத்து நிறைந்த அரிசியாகும்.
மூங்கில் அரிசி என்பது காடுகளில் விளைகின்ற மூங்கிலின் பூபகுதியில் இருந்து சேகரிக்கப்படும் விதையாகும். மூங்கில் அரிசி என்பது அதிகபடியான ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இது நாம் உண்ணும் அரிசிக்கு மாற்றாக சமைத்து உண்ண ஏற்றதாக உள்ளது. அதிக நெருக்கமான காடுகளில் வளரும் மூங்கிலில் இருந்து சேகரிக்கப்படும் அரிசி என்பது மிக குறைந்த அளவிலேயே கிடைக்கின்றது. இதனை காடுகளில் வாழும் பழங்குடியினர் சேகரித்து நகரப்பகுதிகளுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் நன்கு நீண்ட ஆண்டுகள் வளர்ந்த மூங்கிலில் மட்டுமே பூக்கள் பூக்கும். அதிலிருந்து மட்டுமே மூங்கில் அரிசியை சேகரிக்க முடியும்.
பச்சை நிற அரிசியாக உள்ள மூங்கில் அரிசி மூங்கிலில் உள்ள சத்துகளை உட்கிரகித்து கொண்ட சிறிய அளவிலான அரிசியாக திகழ்கிறது. இனிப்பு சுவையுடன் கூடிய மூங்கில் அரிசி உறுதியானது என்பதுடன், ஊட்டச்சத்து நிறைந்த அரிசியாகும். உடலில் உள்ள வாத, பித்த, கப தோஷங்களை நிவர்த்தி செய்வதுடன் உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. அதாவது சிறுநீர் வழியே உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் வகையில் இதன் செயல்பாடு அமைகிறது.மூங்கில் அரிசியில் உள்ள கலோரி
மூங்கில் அரிசி அதிகபட்ச கலோரி அளவு கொண்டது. ஒரு கப் அளவு அரிசியில் மட்டும் 160 கலோரி அளவு நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான தினசரி கலோரி அளவான 2000 எனும்போது இது அதில் 8 சதவீத கலோரி அளவை பூர்த்தி செய்கிறது. அதுபோல் மூங்கில் அரிசி உணவை சாப்பிட்டவுடன் உடனடியாக செரிமானம் அடைந்து அதில் உள்ள கலோரி சத்து உடனடியாக உடலுக்கு சென்றுவிடும். அதனால் உடனடியாக உடல் சக்தி அதிகரித்துவிடும்.
கார்போஹைட்ரேட்ஸ்
மூங்கில் அரிசியில் கார்போஹைட்ரேட் அளவு என்பது மிக முக்கியமான சத்தாக உள்ளது. அதாவது ஒரு கப் மூங்கில் அரிசியில் மட்டுமே 34 கிராம் அளவுக்கு கார்போஹைட்ரேட்ஸ் இருக்கின்றது. விளையாட்டு செயல்பாடுகள் கொண்ட நபருக்கு தேவையான அதிகபட்ச கார்போஹைட்ரேட்ஸ் வழங்குகிறது
புரத சத்து அளவு
ஒரு கப் மூங்கில் அரிசியில் சுமார் 3 கிராம் அளவு புரதசத்து உள்ளது. இந்த புரோட்டீன் சத்து மூலம் உடல் செல்கள் மற்றும் தசை கட்டமைப்புகளை சரிசெய்ய முடியும்.
கொழுப்பு சத்து எனும்போது மூங்கில் அரிசியில் கொழுப்பு சத்தே இல்லை. அதனால் உணவு கட்டுப்பாடு மேற்கொள்பவர்கள் இந்த அரிசி உணவை உட்கொண்டால் சிறப்புற இருக்கும்.
மூங்கில் அரிசியின் முக்கியமான பணிகள்
மூங்கில் அரிசியை உட்கொள்வதன் மூலம் குழந்தையின்மை பிரச்சினை தீர்வாகிறது. உடலில் உள்ள மூட்டுவலி, வாதநோய்கள், முதுகுவலி போன்ற பிரச்சினைகளை தீர்க்கின்றது. குறைந்த கொழுப்பு சத்து என்பதுடன் அபரிமிதமான பீ6 விட்டமின் நிறைந்த வாறும் உள்ளது. எனவே, மூங்கில் அரிசியை நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.
மூங்கில் அரிசியில் உணவுகள்
மூங்கில் அரிசியை நாம் சாதம் வடித்து வைக்க முடியாது. பெரும்பாலும் கஞ்சி போன்றுதான் செய்து சாப்பிடுவர். அதுபோல் மூங்கில் அரிசியை கொண்டு இட்லி மாவு தயாரித்து இட்லி, தோசை போன்ற உணவுகளை செய்யலாம். குழைய வேகவைத்தே மூங்கில் அரிசியை உணவில் சேர்க்க முடிகிறது என்பதால் விதவிதமான பாயசங்கள் செய்யும்போது மூங்கில் அரிசியை பயன்படுத்திடலாம். மேலும் மூங்கில் அரிசி மாவை கொண்டு அதிரசம், மாவிளக்கு மற்றும் விதவிதமான காரங்கள் செய்து சாப்பிடலாம். மூங்கில் அரிசி உணவை சாப்பிடும்போது உடலுக்கு உறுதி கிடைப்பதுடன் அதிக சுறுசுறுப்புடன் உடல் உறுப்புகள் செயல்படவும் முடிகிறது.
மூங்கில் அரிசி உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகின்றது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பது, கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளையும் மூங்கில் அரிசி செவ்வனே செய்கிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் விட்டமின் குறைபாட்டை போக்கும் தன்மையுள்ளதால் அக்கால கட்டத்தில் பெண்கள் விரும்பும் வகையிலான மூங்கில் அரிசி உணவுகளை செய்து சாப்பிட செய்யலாம். மூங்கில் அரிசி உயரமான மூங்கிலில் இருந்து தானாகவே பூமியில் விழுந்திடும். அதனை சேகரம் செய்வதே விற்பனைக்கு தரப்படுகிறது. இயற்கையின் அருட்கொடையால் பூமிக்கு வரும் மூங்கில் அரிசி உன்னதமானது.