20-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 3ம் திகதி, ஸபர் 10ம் திகதி, 20-10-2018 சனிக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி இரவு 7:44 வரை; அதன்பின் துவாதசி திதி, சதயம் நட்சத்திரம் நாள் முழுவதும், அமிர்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்
பொது : ஏகாதசி விரதம், பெருமாள், சனீஸ்வரர் வழிபாடு.
மேஷம்:
செயலில் லட்சிய நோக்கம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற மூலதனத்தை அதிகப்படுத்துவீர்கள். உற்பத்தி, விற்பனையால் லாபம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.
ரிஷபம்:
வாழ்வில் புதிய வசந்தகாலம் உருவாகும்.தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். அபரிமிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர்.
பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.
மிதுனம்:
நண்பரின் எதார்த்த பேச்சு சங்கடம் ஏற்படுத்தும். தொழில், வியாபாரத்தில் சராசரி ஆதாயம் கிடைக்கும். பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிடுவீர்கள்.
வெளியூர் பயணத்தில் மாறுதல் ஏற்படும். பெண்கள் பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம்.
கடகம்:
குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் நம்பிக்கை தரும். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிர்ணயித்த இலக்கு நிறைவேறும்.
சிலருக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.
சிம்மம்:
முக்கிய விஷயத்தில் சுமூக தீர்வு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேற கூடுதலாக பணிபுரிவீர்கள்.
தாராள பணவரவு கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உண்டு. உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
கன்னி:
நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். இஷ்ட தெய்வ அருளால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும்.
உபரி வருமானத்தால் சேமிப்பு உயரும். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். பெண்கள் விரும்பிய உணவு உண்டு மகிழ்வர்.
துலாம்:
எதிர்வரும் பணிகளுக்காக முன்னேற்பாடு செய்வது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும்.
சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் அறிமுகம் இல்லாதவரிடம் பழக வேண்டாம்.
விருச்சிகம்:
மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணவிஷயத்தில் பாதுகாப்பு தேவை.
பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் உடல்நலனில் அக்கறை கொள்வர்.
தனுசு:
பொதுநலத்துடன் செயல்படுவீர்கள். சகோதரவழியில் அனுகூலம் கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள்.
லாபம் பெருகும். பணியாளர்கள் சலுகை பெறுவர். பெண்களுக்கு எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.
மகரம்:
கூடுதல் பணிகளால் சிரமம் ஏற்படலாம். பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரம் ஓரளவு வளர்ச்சி பெறும்.
பணவரவு சுமாராக இருக்கும். பணியாளர்கள் வாக்குவாதம் தவிர்க்கவும். பெண்கள் பணம். நகை இரவல் கொடுக்க வாங்கக்கூடாது.
கும்பம்:
எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும். மனதில் உற்சாகமும், நம்பிக்கையும் வளரும்.தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள்.
பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான நாளாக அமையும்.
மீனம்:
சிலர் சுயலாபத்திற்காக உதவ முன்வருவர். தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பால் வளர்ச்சி காண்பீர்கள்.
பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். பாதுகாப்பு குறைந்த இடங்களுக்கு செல்லக் கூடாது.