Loading...
உங்க மனசுக்கு புடிச்ச வேலையில் இப்போது தான் சேர்ந்திருப்பீர்கள். ஓரளவுக்குக் கையில் காசு புரளும் இந்தச் சமயத்தில் வங்கிகளிடமிருந்து கிரெடிட் கார்டு வாங்கச் சொல்லி கவர்ச்சிகரமான அழைப்புகள் வரத் தொடங்கியிருக்கும்.
வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க, கவர்ச்சிகரமான திட்டங்களை முன்வைத்து உங்களுக்கு வலை விரிப்பார்கள். ஆனால் உங்களுக்குக் கிரெடிட் கார்டு அவசியமா அனாவசியமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
Loading...
தேவையற்ற செலவுகளை குறைக்கும் பட்சத்தில் கிரிடிட் கார்டுகள் பயன்படுத்துவம் நன்மையே.
கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் மூலம் ஏற்படும் நன்மை என்ன?
- கிரெடிட் கார்ட் என்பது நிதி நிறுவனங்கள் வழங்கும் கட்டண அட்டை, இதன் மூலம் சிறு கடன் பெறமுடியும். மேலும் கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் மூலம் பல நன்மைகள் எமக்கு உண்டு அவற்றை தெரிந்துக்கொள்வோம்…
- கிரெடிட் கார்டுகள் பணம் செலுத்தும் சேவையும் கடன் பெறும் சேவையும் சேர்த்து வழங்குகின்றது. தேவைக்கு ஏற்ப எப்பொழுது வேண்டுமானாலும் கடன் பெற்றுக்கொள்ள முடியும்.
- கிரெடிட் கார்டில் பயன்பாட்டில் மற்றும் அதன் சலுகைகள் மூலம் சலுகை புள்ளிகள் வழங்கப் படுகின்றது. செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சில புள்ளிகள் வழங்கப்படுகின்றது.
- கேஷ்பே கிரெடிட் கார்டுகள் அமெரிக்காவில் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்தக் கிரெடிட் கார்டை கொண்டிருப்பவர்கள் சில சமயம் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.
- பெட்ரோலிய நிறுவனங்கள், சினிமா நிறுவனங்கள், இணையதள விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த சில சலுகைகளை இந்த கிரெடிட் கார்டு மூலம் விளம்பர படுத்துகின்றனர்.
- சில கிரெடிட் கார்டுகள் வட்டியில்லா கடன் கொடுக்கின்றன. அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னரே செலுத்தியிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அதற்கு 18% வட்டி செலுத்தவேண்டும். தேவை இல்லாத செலவினங்களை குறைக்கும் பட்சத்தில் கிரெடிட் கார்டுகளை உபயோகிப்பது சிறந்த நன்மைகளை தரும்
Loading...