ஒருபக்கம் உடல் பருமனானவர்கள் ஒல்லியாக வேண்டுமே என மாய்ந்து டயட் செய்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஒல்லியானார்கள் என்னென்னவோ சாப்பிட்டும் உடல் ஏறவில்லையே என கவலைப் படுவதுண்டு. இக்கரைக்கு பச்சை என்பது போலத்தான்.
உடல் எடை ஏறாமல் இருப்பது ஒரு வரம் என்றாலும் மிகவும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு கேலி கிண்டல்களுக்கு பஞ்சம் இருக்காது. போஷாக்கின்றி ஓடிசலாக இருப்பது நன்றாக இருக்காது. கன்னங்கள் ஒட்டி முகத்தில் வயதான களை உண்டாகும். எந்த ட்ரெஸ் போட்டாலும் சோளக்காட்டு பொம்மைக்கு போட்டது போலத்தோன்றும்.
உடல் ஒல்லியாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் சரியான உணவை தேர்ந்தெடுக்காததே. டயட் தவிர்த்து உடலில் ஏதாவது பிரச்சனைகள், தைராய்டு நோயின் அறிகுறி, வயிற்றில் பூச்சி, கல்லீரல் பாதிப்புகள், சர்க்கரை நோய், என பலவும் காரணங்கள் இருக்கலாம்.
அதற்காக துரித உணவுகளையோ, ரெடிமேட் நொறுக்குத் தீனிகளையோ தேடதீர்கள். இவை மோசமானவை.
உடல் எடை குறைக்கவும் , அதிகரிக்கவும் உதவும் உணவுகள் உண்டு. உணவின் மூலமாகவே பல நோய்களையும் குணப்படுத்தலாம். அப்படித்தான் இந்த மெலிந்த் உடல் பிரச்சனையையும் போக்கிடலாம். ஒல்லிப்பிச்சான் உடலை போஷாக்காய் மாற்ற உதவும் உணவுகளை இந்த பதிவில் காணலாம்.
அத்திப் பழம்
அத்திப் பழத்தை இரவில் ஊற வைத்து மறு நாள் சாப்பிடவேண்டும். தினமும் இப்படி 2 ஊற வைத்த அத்திப் பழங்களை சாப்பிட்டால் 20 நாட்களில் வித்தியாசத்தைக் காணலாம்.
உளுந்து
ஒல்லியாக இருப்பவர்கள் உளுந்தை நிறைய உடலுக்கு சேர்த்துக் கொண்டால் மிக எளிதாக உடல் குண்டாகும். உளுந்து வடை, உளுந்து இட்லி, உளுந்து துவையல் என சாப்பிட்டு வந்தால் சீக்கிரம் போஷாக்கு பெறுவீர்கள்.
வெந்தயம்
வெந்தயத்தை வேக வைத்து அதனுடன் வெல்லம் மற்றும் 1 ஸ்பூன் நெய் கலந்து ஒரு உருண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே உடல் பூரிப்பு உண்டாகும்
உலர் திராட்சை
தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும். சாதரண திராட்சையை விட 8 மடங்கு அதிகமாக குளுகோஸ் இருப்பதால் உடல் எடை அதிகரிக்க உதவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தரும்
கொண்டைக் கடலை
தினமும் ஊற வைத்த கொண்டைக் கடலையை சாப்பிட்டு வர வேண்டும். 10- முதல் 15 வரை கொண்டைக் கடலையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தரும். இவை புரதம் அதிகம் உள்ளது. உஇவை சதைப் பிடிப்பை உடலுக்கு அளிப்பவை.
எள்ளு
எள்ளு ஒல்லியாக இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இது உட்ல எடையை அதிகரிக்கச் செய்யும். எள்ளுப் பொடி, எள்ளு சட்னி என எள்ளிய தொடர்ந்து உண்வைல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வாழைப்பழ மில்க் ஷேக்
வாழைப் பழத்தை பாலில் கலந்து மில்க் ஷேக் செய்து தினமும் குடியுங்கள். உடல் எடையை அதிகரிக்கும் பண்பு வாழைப்பழத்தில் உள்ளது. தினமும் ஒரு வாழைப்பழ மில்க் ஷேக் நல்ல வாளிப்பை தரும்.
பகலில் தூக்கம்
மதிய நேரம் ஒரு 20 நிமிடங்கள் தூங்கினால் உடல் எடை கணிசமாக கூடும். இது நிருபீக்கப்பட்ட உண்மை. அதிகம் தூங்கக் கூடாது. பின்னர் இரவில் தூக்கமில்லாமல் அவஸ்தைப் பட நேரிடும்.
பீநட் பட்டர் மற்றும் பிரட்
பீனட் பட்டரை பிரட்டில் தடவி சாப்பிட்ட வேண்டும். தினமும் இப்படி இரண்டு ஸ்லைஸ் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பாதாம் பால்
பாதாம் பாலில் அதிக புரதம் இருப்பதால் போஷாக்கை உடலுக்கு அளிக்கும். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கூட்டச் செய்யும். தினமும் பாதாம் பால் குடிக்க வேண்டும்.
பாஸ்தா
பாஸ்தா செய்வதற்கு எளிதானது. அதனுடன் காய்கறிகளும் சேர்த்து சமைக்கும்போது அனைத்து ஊட்டச் சத்தும் நமக்கு அளிக்கிறது. ஆகவே வாரம் 2 நாட்கள் பாஸ்தா சாப்பிடுங்கள்.
தயிர்
தயிர் அல்லது யோகர்ட்டை அதிகம் சாப்பிடுங்கள். லஸ்ஸியாக சாப்பிட்டால் கூடுதல் சிறப்பு. உடல் எடை கணிசமாக கூடும். தயிரில் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
கடலை எண்ணெய்
சமையலுக்கு கடலை எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள். சில வாரங்களிலேயே உடல் எடை கூடியிருப்பதையும் சருமம் மினுமினுப்பதையும் காண்பீர்கள்.
2 மணி நேரத்திற்கு ஒருதடவை பால்
காலை முதல் இரவு வரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு கப் பால் வீதம் அருந்த வேண்டும். இதற்கு பால் வைத்தியம் என்று பெயர். அப்படி தொடர்ந்து குடிக்கும்போது உடல் எடை அதிகரிக்கும்.
சோயா
சோயா உடல் எடையை அதிகரிக்கும். சோயா மாவில் செய்யப்பட்ட நொருக்குத் தீனிகள், சோயா கலந்த சப்பாத்தி, சோயா எண்ணெய் அல்லது சோயா பால் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுங்கள்.
குறிப்பாக பெண்குழந்தைகளுக்கு சோயா மிகவும் நல்லது. வயது வராத பெண் குழந்தைகள் இதனை அதிகம் சாப்பிடுவதால் ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கவைக்கும்.
நீர்ச்சத்து காய்கள்
பூசணிக்காய், சுரைக்காய், ஆகியவற்றை தவறாமல் வாரம் 3 முறை சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றில் கூட்டு, இனிப்பு வகைகள் செய்து சாப்பிட்டாலும் நல்ல பலன்களிய தரும்.
நல்ல கொழுப்புள்ள பழம்
அவகாடோவில் நல்ல கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் தீங்கை விளைவிக்காது. உடல் பருமனையும் அதிகரிக்கச் செய்யும். பெரும்பாலும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு
சத்துப் பற்றாக்குறை அதிகம் இருக்கும். அவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால், தேவையன ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், உயர் ரக விட்டமின்கள் என பல சத்துக்கள் உள்ளது.
இவற்றையெல்லாம் பயன்படுத்தியும் உடல் எடை கூடாமல் ஒல்லியாகிக் கொண்டே போனால் உடனடியாக மருத்துவரை நடுதல் நல்லது. ஏனெனில் உடல் எடை கூடாததற்கு கீழ்கண்டவைகள் காரணமாக இருக்கலாம்.
உடல் எடை குறைவதன் அறிகுறி
தைராய்டு பாதிப்பு
ஹைபர் தைராய்டு எனப்படும் அதிகப்படியான தைராய்டு ஹார்மோன் உடலில் சுரந்தால் உடல் எடை மிகவும் குறைந்து காணப்படுவார்கள்.
சிறுநீரக கற்கள்
சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் உடல் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும். அடிக்கடி சிறு நீர் கழித்தல், அடிவயிற்று வலி, எரிச்சல் இருந்தால் சிறுநீரக கற்களின் அறிகுறியாக இருக்கலாம்.
சர்க்கரை வியாதி
உடலில் சர்க்கரை வியாதி வந்தால் சடாரென உடல் எடை குறைய ஆரம்பிக்கும். ஒரே மாதத்தில் 10 கிலோ வரை குறைய ஆரம்பித்திருக்கும். அதோடு தலை சுற்றல், அடங்காத நீர் தாகம் இவைகளும் சேர்ந்திருந்தால் இது சர்க்கரைவியாதியின் அறிகுறி.
மன அழுத்தம்
தாங்க முடியாத அழுத்தத்திற்கு உட்படுபவர்களுக்கு உடல் எடை குறைய ஆரம்பிக்கும். இதற்கு செரடோனின் ஹார்மோன் அதிகளவில் சுரப்பதால், மனம் அமைதியின்றி இருக்கும். செரிமானமும் குறையும்.
வயிற்றில் பூச்சிக்கள்
வயிற்றில் புழுக்கள் அதிகம் இருந்தாலும் உடல் எடை கூடாது. சாப்பிடும் உணவிலிருந்து பெறப்படும் சத்துக்களை உறிஞ்சி புழுக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்.
இதனால் எத்தனை நீங்கள் சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள புழுக்கள்தான் வளர்ந்து கொண்டிருக்குமே தவிர நீங்கள் இல்லை.
காச நோய்
டி.பி எனப்படும் காச நோய் இருந்தாலும் உடலில் எடை திடீரன குறைய ஆரம்பிக்கும். நாள்பட்ட இருமல் இருக்கும். இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
செரிமானக் குறைவு
செரிமான மண்டலத்தில் பிரச்சனை இருந்தாலும், உடல் எடை குறைய ஆரம்பிக்கும். சிலருக்கு உணவானது சரியாக செரிமானமாகாமல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்பட்டு, உடல் எடை குறைந்து காணப்படுவது அப்போதே நன்கு தெரியும்.
வயிற்றில் நோய்கள்
அல்சர், வயிற்றில் புண் அல்லது கட்டி இருந்தாலும் உடல் எடை குறையும். மருத்துவரைச் சென்று நாடி பரிசோதிப்பது நலம். கல்லீரல் அல்லது கணையத்தில் அழற்சிகள் இருந்தால், அது உடல் எடையைக் குறைக்கும்.