இந்நாட்டில் அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அந்தப் பொறுப்பு கல்விக் கொள்கைகளை உருவாக்கும் அதிகாரிகளிடமே உள்ளதாகவும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யுமாறும் மருத்துவ நிபுணர் அயேஷா லொக்குபாலசூரிய தெரிவித்துள்ளார்.
புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் நடாத்தப்பட்ட நேர்காணல் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்தப் பரீட்சையை ரத்துச் செய்ய முடியாமல் இருப்பதற்கு மாற்றுவழி இல்லாததே காரணம். பரீட்சையை இரத்துச் செய்து பிள்ளைகளை மேலே கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேறு முறையொன்றை எண்ணவே இல்லை. அதனால்தான் இந்தப் பரீட்சையை ஏழாம் தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்று கோரிக்கை விடுக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.