பிரான்ஸ் Gargenville இல் 39 வயதுடைய பெண் ஒருவர் அவரது கணவரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வியாழக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு நாற்பது வயதான நபர் ஒருவர் Gargenville நகர காவல்துறையினருக்கு அழைபெடுத்து, தனது மனைவி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், கோமா நிலையில் இருந்த பெண்ணை மீட்டு Mantes-la-Jolie மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் குறித்த பெண் அதற்குள்ளாக உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், பெண்ணின் பின் தலையில் பலமாக அடிபட்டிருந்ததாகவும், மிகுந்த வலி காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் நேற்று வெள்ளிக்கிழமை காலை Versailles நகர காவல்துறையினர், குறித்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர்.