Loading...
இலங்கையில் முற்றுமுழுதாக போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ள பொலிஸ் திணைக்களத்திற்கு கடந்த மூன்று வருடங்களில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு பக்கபலமாக செயற்படுகின்றது என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஆணைக்குழுவின் அனுசரணையும் ஆலோசனையும் இல்லையேல் இலங்கை பொலிஸ் சேவை இவ்வளவு தூரம் சாத்தியமான காரியங்களை புரிந்திருக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்,
Loading...
பொலிஸ்மா அதிபர் நிதியத்திலிருந்து, பொலிஸ் திணைக்களத்தில் திறம்பட செயலாற்றியவர்களை கெளரவிக்கும் வகையில் பணப்பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ்மா அதிபர் இவ்வாறு கூறியுள்ளார்.
Loading...