Loading...
கடந்த 40 ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவில் விவாகரத்து வீதம் மிகக்குறைந்த எண்ணிக்கைக்கு சென்றிருக்கிறது என அவுஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதாவது ஜோடிகள் கூடியளவு ஒன்றாக வசித்து (live together), அதற்குப் பின்னர் திருமண பந்தத்துக்குள் நுழைகிறார்கள்.
இதனால் விவாகரத்து மிக்குறைவாக உள்ளதென்ற காரணம் முன்வைக்கப்பட்டுள்ளது.
Loading...
கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி 80% அவுஸ்திரேலிய ஜோடிகள் ஒன்றாக வசித்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பழகிய பின்னரே திருமணம் செய்கின்றனர்.
இந்த வீதமானது 1975 ஆம் ஆண்டு 16 வீதமாகவே இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...