ஒருவரது உடலில் இருந்து அன்றாடம் சராசரியாக 1,500 மில்லி முதல் 2500 மில்லி வரை சிறுநீர் பிரிகிறது. சிறுநீரகங்கள் செயல் இழப்பு ஏற்பட்டு கழிவுகள் வெளியேறாமல் தங்கிவிடும் போதுதான் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
சரியாக நீர் அருந்தாமல் இருத்தல், அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகள் சாப்பிடுதல், முக்கியமாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை சரியாக கவனிக்காமல் விட்டு விடுவதால் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
சில உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தால் நீரக நோய்கள் வராமல் தடுக்கலாம்.
ஓமம்
ஓம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும். அல்லது ஓமத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை வாரம் இரு நாட்கள் அருந்தலாம்.
புளி
புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மஞ்சள்
மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.
துளசி
புதிதான துளசி இலையின் சாறுடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால் சிறு நீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கலாம். சிறுநீரகக் கற்கள் இருந்தாலும் கரைந்து விடும்.
காய்கறிகள்
பூசணிக்காய், வாழைத்தண்டு, பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகளை அடிகக்டி உணவில் சேர்த்துக் கொள்வதால் சிறு நீர் நன்கு பிரியும். சிறு நீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
மாதுளம் பழம்
இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன் சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்
இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தரும் .