நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நஸ்ரியா ராஜா ராணி, நையாண்டி போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்கா திரைப்படத்தில் நடித்தார்.
பிறகு சில மலையாளப்படங்களில் நடித்தவர் நடிகர் ஃபகத் ஃபாஸிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
தற்போது மீண்டும் நடிகை நஸ்ரியா அஜித்தின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்போது அவர் சதுரங்க வேட்டை புகழ் இயக்குனர் எச்.வினோத் அஜித்தை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது வேறு எதுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா எனத் தெரியவில்லை.
அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்த இந்திப் படமான பிங்க் திரைப்படத்தின் ரீமேக் என்றும் சொல்லப்படுகிறது.
அஜித் தற்போது சிவாவின் இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.
நான்காவது முறையாக அஜித் சிவா கூட்டணி என்பதால், வேறு இயக்குனர்களோடு அஜித் நடிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
அந்த எதிர்பார்ப்பை எச்.வினோத் பூர்த்தி செய்வார் என ரசிகர்கள் நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் உள்ளனர்.